பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படாத கட்சிகளுக்கான பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது அதில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஜினி கட்சியின் பெயர் இதுதான் என்றும், அவருடைய சின்னம் ஆட்டோ சின்னம் என்றும், ஊடகங்களில் தகவல்கள் பரவியது.
டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை பற்றிய அறிவிப்பு வெளியிட இருக்கின்ரறார் இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் அளித்திருக்கிறது .தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தான் அந்த விளக்கம் தெரிவித்தது . உரிய கட்சியின் பெயர் அது கிடையாது என்பதை நிராகரிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், ரஜினியின் மக்கள் சேவை கட்சி ஆரம்பிப்பதற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் சார்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் மக்கள் சேவை இயக்க மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்குப் பின்னால் செய்தியாளர்களிடம் பேசிய தங்க சண்முகசுந்தரம், புதிதாக கட்சி ஆரம்பிக்க இருக்கின்ற ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கூடாது, அவ்வாறு பதிவு செய்தால் மக்கள் சேவை இயக்கத்திற்கும் மக்கள் சேவை கட்சிக்கும் பொதுமக்களிடையே வேறுபாடு தெரியாது இதனால், குழப்பத்தை விளைவிக்கும் கடந்த 25 வருடங்களாக மக்கள் நலன் கருதி நம்மாழ்வார் கொள்கை வழியிலே இயங்கிவரும் மக்கள் சேவை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும், மற்றும் அது ஆற்றிவரும் சேவைகளுக்கும், ஊறு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
மக்கள் சேவை இயக்கத்தின் பணிகள், மற்றும் கொள்கைகளை விவரித்த அவர், மக்கள் சேவை கட்சி என பதிவு செய்வது மக்கள் சேவை இயக்கத்தினருக்கு இயக்கத்தின் செயல்பாடுகள், போன்றவற்றிற்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான இந்த முறையில், இன்னொரு இயக்கத்தின் புகழ்,மற்றும் உரிமையை மற்றவர்கள் எடுத்துக் கொள்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி அல்லது மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.
அதோடு,ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி, அல்லது இயக்கம், என்று இல்லாமல் வேறு ஒரு பெயரில் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கின்றோம். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் சேவை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்யுமானால், உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும், தங்க சண்முகசுந்தரம் அறிவித்திருக்கின்றார். இது குறித்து கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.