Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு உயர்வு..! தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கான வயது உச்சவரம்பை 30ல் இருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில்,
தமிழக அரசில் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி.க்கு (SSLC) கூடுதலான கல்வி இருக்கக்கூடாது.

இந்தப் பணிகளில் சேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்சவரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version