Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்தானம் டிடெக்டிவ்வாக நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்… ரிலீஸ் தேதி

சந்தானம் டிடெக்டிவ்வாக நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்… ரிலீஸ் தேதி

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவதில்லை. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை.

அதே போல சமீபத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து சந்தானத்தின் அடுத்த ரிலீஸாக ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படம் தெலுங்கில் வெளியான ஏஜெண்ட் சாய் சினிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக் ஆகும். நகைச்சுவை கலந்த புத்திசாலி தனமான டிடெக்டிவ் ஒருவனின் கதையாக இந்த படம் உருவாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. இந்த படத்தை தமிழில் மனோஜ் பீடா ரீமேக் செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. நீண்ட காலமாக ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் சந்தானத்துக்கு இந்த படமாவது ஹிட்டாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version