அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

0
147
Agni's game begins !! The scorching summer sun !! People wandering in search of watermelon !! Happy farmers !!

அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்குதல் அதிகமாகத்தான் உள்ளது. இந்த நிலையில்  அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று முதல்  தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை 25  நாட்கள் நீடிக்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் 110 டிகிரியைக்கூட எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சில சமயங்களில் சென்ச்சுரி அடித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்த கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் சிறிது குறைந்து காணப்பட்டது. காலை நேரங்களில் கடுமையான வெயில் அடித்தாலும்  மாலை நேரங்களில் கனமழையால் வெயில் குளிர்ந்து விடுகிறது. இதேபோல் இந்த நிலை மூன்று வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த அக்னி வெய்யிலின் தாகத்தை குறைக்க பொதுமக்கள் தண்ணிர், மோர், தர்பூசணிப் பழம், போன்ற உடலுக்கு குளிர்ச்சியான ஆகாரங்களை அதிமாக சேர்த்துக் கொண்டால் உடல் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் எதிப்பு சக்தி இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் அக்கினி வெயில் தாகத்தை குறைக்க கோடைக்கால ஸ்பெசலான தர்பூசணியை தேடி அலைகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தர்பூசணிப் பழத்தின் வியாபாரம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.