ஈரான் தன் நாட்டின் அணுசக்தி பொருட்கள், அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்றும், அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதிப்பது இல்லை என்றும் ஐ.ஏ.இ.ஏ. என்று அழைக்கப்படுகிற சர்வதேச அணுசக்தி முகமை குற்றம் சுமத்தி வந்தது. இதையொட்டி இருவரும் கூட்டறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “நல்ல நம்பிக்கையுடன் சர்வதேச அணுசக்தி முகமை குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைப்படுத்தல் சிக்கல்களை தீர்ப்பதில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஈரான் தானாக முன்வந்து, சர்வதேச அணுசக்தி முகமையால் குறிப்பிடப்பட்ட 2 அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி வழங்கி உள்ளது. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காக சர்வதேச அணுசக்தி முகமையின் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு ஈரான் உதவுகிறது” என கூறப்பட்டுள்ளது. ஈரான் தனது 2 அணுசக்தி தளங்களை பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.