Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!! 

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!! 

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வேளாண் சங்கமம் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு அரசின் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண்மை கண்காட்சியை வேளாண் சங்கமம் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்.

3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன் அவற்றை முறையாக விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்ததாக இந்த கண்காட்சியில் வேளாண் இயந்திரங்களையும் காட்சிப்படுத்து வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்கான அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பற்றி தெரிந்து கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும், அதனுடன் விவசாயிகளுக்கான சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் மின்னணு விற்பனை வேளாண் காடுகள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் எந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கண்டிப்பாக இந்த கண்காட்சியில் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி சுவர்ணா தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version