Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஹா! வேற லெவல் மசாலா டீ.. வாழ்வில் மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

#image_title

ஆஹா! வேற லெவல் மசாலா டீ.. வாழ்வில் மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது.

டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி செய்து பாருங்கள் தேநீர் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1கப்

*டீ தூள் – 1 தேக்கரண்டி

*பட்டை – 1 துண்டு

*இலவங்கம் – 2

*ஏலக்காய் – 4

*கருப்பு மிளகு – 5

*இஞ்சி – சிறு துண்டு

*சர்க்கரை – 3 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் டீ போடுவதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளவேண்டும்.அதாவது பட்டை,இலவங்கம்,ஏலக்காய்,மிளகு விதை உள்ளிட்டவற்றை எடுத்து ஒரு உரலில் போட்டு அதோடு 1 துண்டு இஞ்சி சேர்த்து இடித்து கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவேண்டும்.பிறகு இடித்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

3.பின்னர் தினமும் டீ தயாரிக்க பயன்படுத்தும் டீ தூளில் 1 தேக்கரண்டி அதில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

4.அதன் பிறகு அந்த டீ பாத்திரத்தில் 1 கப் பால் ஊற்றி அதனோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

5.நன்கு கொதித்து வந்த பின்னர் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கி விடவும்.

6.இதன் பிறகு அடுப்பை அணைத்து 1 நிமிடத்திற்கு பிறகு அதை வடிகட்டி பருகவும்.

Exit mobile version