அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி குறித்து அளித்த பதில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தில் கொந்தளித்த எடப்பாடி.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் திமுகவை எதிர்க்கும் ஒத்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இந்த கேள்வியை கேட்ட போது அவர் நாங்கள் பாஜக உடன் இப்போதும் கூட்டணி வைக்கபோவதில்லை, எப்போதும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை, என்று முற்றிலுமாக அதை எதிர்த்தார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கோபத்தில் நான் பாஜக உடனான கூட்டணி குறித்து தெளிவாக கூறிவிட்டேன், வேண்டுமென்றே திட்டம்போட்டு இதை மீடியா வெளிச்சத்தில் வைத்துள்ளனர். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பாஜக உடன் அமைக்கவில்லை. அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைக்க போவதில்லை.
நான் பாஜகவை தவிர மற்ற கட்சிகளை தான் திமுகவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறினேன் என்று அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.