தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்றாலும்கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் தமிழகத்திற்கு அனைத்தையும் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்பொழுது நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அவர் உரையாடும்போது மத்திய அரசின் வேளாண் சட்டம் காரணமாக, விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என எதிர்க்கட்சிகள் தங்களுடைய பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பொய்யை மட்டுமே பரப்புவதுதான் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளின் வேலை. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து இருப்பதன் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு மாபெரும் பயம் வந்துவிட்டது பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றம் உருவாகியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகள் இதுவரையில் கோவிலுக்கு செல்லாமல் இருந்தார்கள். ஆனால் தற்சமயம் அவர்கள் கோயிலுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி அமையவேண்டும், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும், தமிழ்நாட்டில் ஒரே ஒரு பாஜகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. இருந்தாலும் கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு எல்லா விதத்திலும் உதவி புரிந்து வருகின்றார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்திருக்கிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.