அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள் ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக அதிமுக!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.இதனால் தேர்தலகளம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஊடகங்களில் கருத்து கணிப்புகள் வெளியாகி வந்தநிலையில் அதில் திமுக தான் வெற்றி பெரும் என பெருமான்மையான கருத்துக்கள் வந்துள்ளது.
இதனால் ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுகவினர் மேற்கு மண்டலத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.12 கோடி வீதம் விநியோகம் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகியது.இப்போது அந்த பணம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல செயலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த பணத்தை பிடிக்க அதிக அளவு பறக்கும் படையினர் ரோந்து பணியிலும்,கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் என எதிர்கட்சியான திமுக கூறி வருகிறது.
ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை.இதனால் பல இடங்களில் பணம் விநியோகம் செய்வதை ஆளுங்கட்சியினர் தொடக்கி விட்டனர்.சில இடங்களில் டோக்கன்கள் மூலமாகவும்,நேரடியாகவும் பணம் விநியோகம் செய்யப்படுகிறது.சேலத்தில் பணத்துடன் பிடிபட்ட முன்னால் எம்.எல்.வை விட்டுவிட்டனர்.கடந்த 1 நாளுக்கு முன்னாக ஆளுக்கட்ச்யின் வேட்பாளர் மகன் காரில் ரூ.1 கோடியை கையும் களவுமாக சிக்கியது.ஆனால் இந்த போலீசார் ஆளுங்கட்சிக்கு உதவும் வகையில் பணம் காரின் கீழே இருந்ததாக மாற்றி வழக்கு பதிவு செய்தனர்.
அதன்பின் தற்போது விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் வீட்டில் வருமானத்துரையினர் அதிரடியாக வீட்டினுள் புகுந்து சோதனை நடத்தினர்.அவர் விஜய பாஸ்கர் அண்ணனின் பி.ஏ என்பதும் குறிப்பிட தக்கது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி.அதனையடுத்து வருமான வரித்துறையினர் வீரபாண்டி வாடகை விட்டிருக்கும் வீட்டிலும் சோதனை நடத்தினர்.அதன்பின் விஜயபாஸ்கரின் கல்குவாரியிலும் சோதனை நடத்தினர்.13 மணி நேரமாக நடந்த சோதனையில் 50 லட்சம் பணம்,கிலோ கணக்கில் தங்கம்,கணக்கில் வராத சொத்துக்கள் என அனைத்தும் சிக்குயதாக கூறப்படுகிறது.தோல்வி பயத்தில் அதிமுக அதிக அளவு பணத்தை கொடுப்பதாக எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர்.அந்தவகையில் சிக்கிய இந்த பணங்கள் லஞ்சமாக கொடுப்பதற்காகத்தான என விசாரித்து வருகின்றனர்.