Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!!

#image_title

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!!

அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

இது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவை எதிர்த்தவர்.திமுக கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தவர்.அவர் மறைவுக்கு பிறகு அதிமுக சற்று ஆட்டம் கண்டது.அதிகாரப்போட்டி,பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக வாக்கு வங்கியில் சற்று சரிவை சந்தித்தது.

தற்பொழுது கூட்டணி முறிவால் தமிழக அரசியலில் இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

இத்தனை நாள் திமுக தனது கூட்டணி கட்சிகளை அடக்கி அதிகாரம் செய்து வந்தது.குறிப்பாக தேர்தல் நேரத்தில் குறைவான சீட்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு வழங்கி வந்தது.
இருந்தும் திமுகவுடன் விசிக,காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைக்க முக்கிய காரணம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது தான்.

தற்பொழுது அதிமுக பாஜகவை கழட்டி விட்டதால் திமுகவில் இருக்கும் சில கட்சிகள் அதிமுக பக்கம் சாய அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் திமுகவுக்கு புதிய தலைவலி உருவாகி இருக்கிறது.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதி.இதனால் பாஜகவை வெறுக்கும் கட்சிகளான காங்கிரஸ்,விசிக,மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வேறு வழி இல்லாமல் தேர்தலில் தாம் வழங்கும் இடங்களில் மட்டும் தான் போட்டியிடும்.மேற்படி தொகுதி பங்கீடு குறித்து மூச்சு விடாது என்று திமுக தலைவர்கள் போட்ட கணக்கு தற்பொழுது தப்பாகி இருக்கிறது.

அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் விலக அதிக வாய்ப்பு இருக்கிறது.இதனால் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாமக தனித்து போட்டியிடும் பட்சத்தில் தமிழக திமுக கூட்டணியின் வாக்கு வங்கியில் சரிவு நிச்சயம்.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திட்டம் போட்டு தான் நடைபெற்று இருக்கிறது.பாஜகவால் அதிமுகவின் செல்வாக்கு குறைத்துள்ளது.பாஜகவின் அடிமை அதிமுக என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சற்று சுதாரித்து கொண்டு நைசாக நழுவி விட்டார்.

அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தன் தலைமையிலான பாஜக எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியாது.வருகின்ற தேர்தலில் மக்கள் பாஜக மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தனித்து போட்டியிட்டால் தான் நிரூபிக்க முடியும் என்று திட்டம் வகுத்து தன் சுயநலத்துக்காக அதிமுகவை விலக வைத்துள்ளார் என்று தெளிவாக தெரிய வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் அமமுக மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்க பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவை தான் நிச்சயம் பாதிக்க போகிறது என்றும் பரவலாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதால் ரோசம் வந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது போல் ஈழத் தமிழர் படுகொலை,தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக காங்கிரஸ்,நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து திமுக விலகுமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Exit mobile version