அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

0
111
#image_title

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை பற்றி சர்ச்சையாக கருத்து தெரிவித்தார்.இவரின் இந்த கருத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் அதிமுக மற்றும் தமிழக பாஜக தலைவரிடையே கருத்து மோதல் ஏற்பட தொடங்கியது. இந்த மோதல் முற்றி கூட்டணி முறியும் நிலைக்கு சென்றுவிட்டது.இது குறித்து பேசுவதற்காக கடந்த 10 தினங்களுக்கு முன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மேலிட பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றனர்.ஆனால் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் போனதால் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தமிழக பாஜக தலைவரை மாற்றுங்கள் என்று வலியுறுத்தினர்.அதிமுகவின் கோரிக்கையை நிறைவேற்ற விட்டால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி கொள்ளும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாகவும் இனி பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது.

மேலும் அதிமுகவின் இந்த முடிவால் தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தரப்பில் பேச்சு அடிபடுகிறது.வருகின்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு டப் கொடுக்கும் அரசியல்வாதியாக உருவெடுத்து விட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க அதிமுக – பாஜக முறிவு குறித்து விளக்கம் கொடுக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.தான் கூறிய கருத்துக்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றார்.தமிழக பாஜக தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது.அரசியலில் இல்லாவிட்டலும் நான் விவசாயம் செய்து பிழைத்து கொள்வேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை அவர்கள் நேற்று இரவு 8 மணிக்கு பாஜக மூத்த தலைவர் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.அதன் பின் இரவு 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

ஜெ.பி.நட்டா மற்றும் அமித்ஷா ஆகிய இருவரிடமும் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்த காரணம்,தமிழக அரசியலில் என்ன நடக்கின்றது என்பது குறித்தும் பாதையாத்திரை குறித்தும் உரிய விளக்கம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இரு தலைவர்களின் சந்திப்பிலும் அண்ணாமலை விரிவாக விளக்கம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த டெல்லி பயணத்தை முடித்து தமிழகம் திரும்பும் அண்ணாமலை நாளை பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் நாளை நடைபெறவிருந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.