பெரும் அதிர்ச்சி காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை! ஆளும் கட்சியின் அழுத்தம்தான் காரணமா? காவல்துறையினர் தீவிர விசாரணை!

0
129

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது இதற்கான பிரச்சாரத்தில் தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த விதத்தில் ஆளும் கட்சியான திமுக எப்படியாவது இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றியை கைப்பற்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக இறங்கி வருகிறது.

ஒருபுறம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பரபரப்பாக காணொலிக் காட்சியின் மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். மறுபுறம் அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் அதிமுக தரப்பிலோ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரையில் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்

இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் ஜானகிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். அதோடு அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தேர்தல் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில், அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அதோடு அந்தப் பகுதியில் இவருடைய செல்வாக்கை பார்த்து ஆளும் தரப்பு கொடுத்த நெருக்கடியின் காரணமாக, கூட அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது போன்ற யூகங்களும் கிளம்பியிருக்கின்றன.