Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் ஆணையத்திடம் வசமாக மாட்டிய அதிமுக!

AIADMK comfortable with the Election Commission!

AIADMK comfortable with the Election Commission!

தேர்தல் ஆணையத்திடம் வசமாக மாட்டிய அதிமுக!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது.அதில் எதிரெதிர் கட்சிகளை மக்களின் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பலவகைகளில் அரசியல்  கட்சிகள் லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது.அவற்றில் பல கோடி மதிபிள்ளான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிப்பட்டன.அதனைத்தொடர்ந்து அதிமுக கையும் காலுமாக சிக்கிக்கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வேட்பாளராக விஸ்வநாதன் அதிமுக சார்பில் நிற்கின்றார்.அவர் பிரச்சாரம் ஆரமிக்கும் முன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் பழக்கம் உள்ளது.அவ்வாறு சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும் போது பொது மக்கள் அவரை வரவேற்க ஆங்காங்கே ஆரத்தி தட்டு மற்றும் தண்ணீர் நிரம்பிய கொடங்களை வைத்து நின்றுக் கொண்டிருந்தனர்.பின் அவர்களிடம் அதிமுக விற்கு ஓட்டு போடும் படி கூறிவிட்டு ஆரத்தி எடுத்த பெண்கள் தட்டில் பணத்தை வைத்தார்.

இது லஞ்சம் போல சிலர் கருதினர்.அதன்பின் இவருடைய தொண்டர்களும் இவருக்கு பின்னாலே பணத்தை பட்டுவாடா செய்து வந்தது.இவர்கள் இவ்வாறு செய்வதை புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.இது அனைவரும் பார்த்து பெருமளவு வைரலாகி வருகிறது.அதன்பின் இந்த புகைப்படமானது தேர்தல் ஆணையம் கண்ணுக்கும் தென் பட்டுவிட்டது போல அவர்கள் பணம் பட்டுவாடா செய்தது லஞ்சம் என நத்தம் பகுதி விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி அவர் காட்டுவேலாம்பட்டியில் நடந்த கூடத்தில் அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.இதனை வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கில் ஆரோக்கியராஜ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.போலீஸ் அதிகாரி நத்தம் பகுதி விஸ்வநாதன் மீது குற்றபிரிவு 171Eன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் மக்களிடம் ஓட்டு கேட்டு வருபவர்களை கடவுளை போல் பாவித்து ஆரத்தி எடுத்து அவர்களது காலில் தண்ணீர் ஊற்றி வரவேற்பதை நிறுத்த வேண்டும்.அத்துடன் அவர்கள் நமக்காக சேவை செய்ய தான் இருக்கின்றனர்.ஆகையால் நாம் அவர்களிடமிருந்து பரிசாகவோ அல்லது லஞ்சமாகவோ எந்தவித பணத்தையும் எதற்காகவும் வாங்க கூடாது.நமது ஓட்டுகளை நேர்மையான முறையில் செலுத்த வேண்டும்.

Exit mobile version