Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தொடங்குகிறது அதிமுகவின் உட்கட்சித் தேர்தல்! தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

செங்கல்பட்டு திருவள்ளூர் உட்பட கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல் இன்று ஆரம்பித்து இரண்டு நாட்கள் நடைபெற இருக்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், கிழக்கு ஈரோடு புறநகர் மேற்கு நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு திருவள்ளூர், கிழக்கு திருவள்ளூர், மேற்கு திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு, செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இருக்கின்ற ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், உள்ளிட்ட பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு மட்டும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பேரூராட்சி நகரம் மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கான தேர்தல் ஆணையர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version