Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

திருவள்ளூர் அருகே அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர் பார்த்திபன் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி சென்றார்.

அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து பார்த்திபன் அவர்களை அருவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன் அவர்களின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்திபன் மீது ஏற்கனவே ஆந்திர காவல்துறையினர் செம்பரக் கட்டைகள் கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் தொழில் போட்டி காரணமாக அரங்கேறியதா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அதிமுகவின் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இச்சம்பவம் குறித்து தனது கண்டனத்தை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில், பார்த்திபன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என்றும் பார்த்திபன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version