ஆரம்பமே அசத்தல்! 2021 ஆம் ஆண்டு முக்கிய தகவலை வெளியிட்ட அதிமுக தலைமைக் கழகம்!

0
118

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகவே எதிர்வரும் 9-1- 2021 அன்றைய தினம் நடைபெறும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

அதிமுக செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம், எதிர் வரும் 9-1-2021 சனிக்கிழமை அன்று காலை 8.50 மணியளவில் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், கழகத்தின் அவைத்தலைவர், மதுசூதனன் அவர்களுடைய தலைமையில், நடைபெறும் என்றும், கழக செயற்குழு ,மற்றும் பொதுக்குழு, உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று கொள்ளுமாறு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

செயற்குழு, மற்றும் பொதுக்குழு, உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு பரிசோதனை செய்து கொண்டு அதனை சான்றிதழுடன் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழோடு தவறாமல், கழக செயற்குழு, மற்றும் பொதுக்குழு, கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். இப்படிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது.