இன்று அதிமுக செயற்குழு:! முதல் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? ஈபிஎஸா?

0
178

இன்று அதிமுக செயற்குழு:! முதல் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? ஈபிஎஸா?

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சி பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர்.தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.அதிலும் அதிமுக கட்சியின் முதல் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் கட்சியில் பெரிய குழப்பம் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த செயற்குழு கூட்டத்தில்,
அமைப்புச் செயலாளர்கள்,
மாவட்ட செயலாளர்கள்,
செயற்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில்,முதல் வேட்பாளர் யார்? பொது செயலாளர் யார்? என்ற முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியில் குளறுபடிகள்!

இந்நிலையில் ஓபிஎஸ் அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ் மதுசூதனனை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி ஈபிஎஸ் தான் முதல் வேட்பாளர் என சில அமைச்சர்களும் ஓபிஎஸ் தான் முதல் வேட்பாளர் என்று சில அமைச்சர்களும்,அவரவர் கருத்தில் உறுதியாக உள்ளனர்.இதனால் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் புதிய புதிய ஆதரவாளர்களுடன் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பக்கம் பொதுச்செயலாளராக ஓபிஎஸ் எனவும் முதல் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி என்கிற ஃபார்முலாவும் முன்வைக்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சில அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரங்கள் தான் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.