Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!

#image_title

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!
கடந்த 14-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் உள்ள முக்கிய நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளை சேர்ந்த அணைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், ஊழல் இல்லாத நாட்டை தான் பிரதமர் மோடி விரும்புவதாகவும், அதற்கான பணிகளை தான் தொடர்ந்து செய்ய போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவையும் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறி அக்கட்சியின் முன்னனி தலைவரான ஜெயக்குமார் கடந்த இரண்டு நாட்களாக சில அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிக்கையில் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் அவர் வெளியிட்டாலும் அதை பற்றி கவலை இல்லை ஏனென்றால் எங்களுக்கு மடியில் கணம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் தேவை இல்லாமல் எங்களை டச் பன்ன வேண்டாம், அது நெருப்போடு விளையாடுவது போன்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை எச்சரிக்கும் வகையில் அவர் பேசியதாவது தற்போது அதிமுக பாஜக இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பாஜக தமிழக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், எங்களை தேவையில்லாம டச் பண்ணினா நெருப்போட விளையாடுற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே… முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசிச்சுப் பாருங்க என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதல்களை பார்க்கும் போது கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Exit mobile version