அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

0
200
DMK revenue minister has a sudden heart attack! Intensive treatment in the hospital!

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவில் மூத்த உறுப்பினர் ஆவார். ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்து கட்சியில் உள்ள அனைவரிடமும் மிகுந்த நம்பிக்கை பெற்ற ஓர் நபர். மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இவருக்கென்று ஓர் தனிப்பெயர் உள்ளது.

தற்பொழுது அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு வேறு அணிகளாக இருக்கும் நிலையில், இவர் இபிஎஸ் பக்கமே ஆதரவு தெரிவித்து உடன் உள்ளார். தற்பொழுது தேவர் குரு பூஜையில் ஓபிஎஸ் அவர்கள் வெள்ளி கவசம் அணிவித்தது எதிர்த்து பல குற்றச்சாட்டை சுமத்தினார். அதில் ஜெயலலிதா அவர்கள் தேவருக்கு கொடுத்த தங்க கவசத்தை வழங்க விடாமல் திமுக தடுத்து நிறுத்தியதாகவும்  சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ் அவர்கள் திருடி வைத்துள்ள பணத்தில் வெள்ளி கவசம் மட்டும் தான் செலுத்த முடிந்ததா என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இவர் முக்கிய பதவியான பொருளாளராகவும் இவரை நியமித்தனர். தற்பொழுது இவர் சென்னையில் தங்கி வருகிறார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டவுடன், உடன் இருந்தவர்கள் விரைந்து அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். சில தினங்களுக்கு முன்பிருந்தே அவருக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாளை மறுநாள் அவர் மீண்டும் திண்டுக்கல்லுக்கு செல்ல உள்ளதாக கூறியுள்ளனர்.