Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து!

AIADMK General Secretary's Diwali greetings to the people!

AIADMK General Secretary's Diwali greetings to the people!

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து!

அதிமுகவில் கடந்த சில தினங்களாகவே பதவிகளுக்கு கொஞ்சம் போட்டி நிலவிவருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு வருவது இபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பல காட்டமாகவும், காரசாரமாகவும் பதில் வந்த நிலையில், அதிமுகவின் நூற்றாண்டு விழாவிலும் அவராகவே, உட்புகுந்து சில வேலைகளை சசிகலா செய்தார்.

அதன் காரணமாக பல்வேறு பேச்சுகளுக்கும் ஆளாகினார். அவர் சொல்லிக் கொண்டால் சொல்லிக் கொள்ளட்டும். அவர் பொதுச் செயலாளர் இல்லை என்று, அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். ஆனாலும் தற்போது மக்களுக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரிலேயே, சசிகலா தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் தடுப்பூசியையும், தவறாமல் செலுத்திக் கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்.
இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதியும் அன்பும் தழைக்கட்டும், வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Exit mobile version