தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

0
256
#image_title

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்தது அதிமுக தலைமை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் 7 தொகுதிகளை கூட்டணி கட்சியான தேமுதிகவிற்க்கு ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள 33தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடவுள்ளது அதிமுக கட்சி.

கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதலே கூட்டணியை உறுதி செய்வது வேட்பாளர் பட்டியலை வெளியிடுதல் வேட்பாளர்களை அறிமுகம் செய்வது, தேர்தல் அறிக்கையை வெளியிடுவது என முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று 40தொகுதிகளுக்கும் தேர்தல் செயல்பாட்டிற்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது அதிமுக தலைமை, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துளளனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, திருவள்ளூர் தொகுதிக்கு வேணுகோபால் தலைமையிலும், வடசென்னைக்கு ஜெயகுமார் தலைமையிலும், தென்சென்னைக்கு கோகுல இந்திரா தலைமையிலும், கொவை மண்டலமான திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்குபி. வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதே போல நாற்பது தொகுதிகளுக்கும் நாற்பது முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரை இன்று தெரிவித்துள்ளார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.