Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களுக்குத் துரோகம் இழைத்த அதிமுக அரசு!

திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்தவர் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார்.

சேலம் மாவட்டம் இருப்பாளியில் பனை தொழிலாளர்களிடையே பேசிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசின் காலடியில் வைத்து விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவை அடகு வைத்துவிட்டார் எடப்பாடி. அதிமுக இப்போது அமித்ஷா முன்னேற்ற கழகம் மாறிவிட்டது எனவும் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? அதிமுகவிற்கு துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி எனவும் பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்குப் பச்சை துரோகத்தை இழைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் முதல்வர் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதற்காக வரவேற்கின்றார்.

நிவர் புயலின் தாக்கம் குறைவாக இருந்த காரணத்தால் பாதிப்புகள் அதிகமாக இல்லை புயலை எதிர்கொள்வதற்காக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தமிழகத்தில் தொழில் முதலீடு சம்பந்தமாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் எனவும் அதிமுக ஆட்சியில் ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை சுய உதவி குழுக்கள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீண்டும் உச்சத்தை தொடும் இந்த ஆட்சியில் பெண்களின் கல்வி கேள்விக்குறியாக இருக்கின்றது அதிமுக ஆட்சி காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார் கனிமொழி.

Exit mobile version