15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல்! நாளைய தினம் தொடங்குகிறது!

0
99

திருவள்ளூர், செங்கல்பட்டு, உட்பட அதிமுகவின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சி தேர்தல் நாளை ஆரம்பித்து இரண்டு நாட்கள் நடைபெற இருக்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒரு சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதிமுகவின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, மாநகர், ஈரோடு புறநகர், கிழக்கு ஈரோடு புறநகர் மேற்கு, நீலகிரி, நாமக்கல், திருவண்ணாமலை வடக்கு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் வடக்கு, திருப்பூர் தெற்கு செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இருக்கின்ற ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி தொகுதிகளுக்கு வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளை கான முதல்கட்ட தேர்தல் நாளை ஆரம்பித்து 15 ஆம் தேதி வரையில் அதாவது நாளை மறுநாள் வரையில் நடைபெறுகிறது.

இதற்கு மட்டும் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.