கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் டிஷ்யூம் டிஷ்யூம்! 4பேர் மருத்துவமனையில் அனுமதி!

0
126

கடலூர் மாவட்டத்தில் அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவகுமார் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப்படிவத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல் குமாருக்கும், இடையே வாய் தகராறு உண்டானதாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் கந்தன் ஆதரவாளர்கள் சேவல் குமார் சென்ற காரை வழிமறித்து இருக்கிறார்கள், அதன்பிறகு கண்ணிமைக்கும் சமயத்தில் அந்த காரை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சேவல் குமாரின் ஆதரவாளர்கள் ஓடிவந்து தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இருவருடைய ஆதரவாளர்களும் கட்சி அலுவலகம் முன்பு இருக்கின்ற கடலூர் திருவந்திபுரம் சாலையில் மோதி கொண்டதாக சொல்லப்படுகிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தார்கள். அவர்கள் கடலூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் அறிந்தவுடன் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக அதிமுகவின் கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.