அதிமுகவின் உட்கட்சி தேர்தல் எப்போது நடைபெறும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
105

பொதுவாக அரசியல் கட்சிகளின் சட்ட விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை விதிமுறை அதன்படி சென்ற 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் 2015 ஏப்ரல் வரையில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்த கட்சியின் பொதுச் செயலாளராக 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல மற்ற நிர்வாகிகளும் உள்கட்சி தேர்தலில் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது.அதற்கு ஏற்றவாறு கட்சியின் விதிகளும் மாற்றப்பட்டது. இந்த விதிகளுக்கு அதிமுகவின் பொதுக்குழு அங்கீகாரம் கொடுத்தது. இதனை தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அதோடு கிராம அளவிலான கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையில் அடுத்த மாதம் அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் நோய் தொற்று காரணமாக, உரிய அவகாசம் இல்லாத காரணத்தால், இந்த உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.இப்படியான சூழலில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் அவருடைய அந்த மனுவில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. அந்த தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் நோய் தொற்று காரணமாக, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் கோரப்பட்டது. எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை உறுதி அளித்து இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் எதிர் மனுதாரராக அதிமுகவையும் ஒன்றிணைத்து வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டு இருக்கின்றார்.