Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

#image_title

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக!
மு.க.ஸ்டாலின் தாக்கு!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: “பிப்ரவரி 16 17 18 ஆகிய நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வெல்லட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவில் உரிமை குரல் முழக்கம் ஒலிக்க இருக்கிறது.

ஒன்றிய அரசின் விடோத வேளாண் சட்டங்களை திமுக எதிர்த்தபோது, அதனை ஆதரித்தது அதிமுக. பாஜக செய்த அனைத்து பாவங்களுக்கும் உடந்தையாக இருந்தது அதிமுக.

பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்ததையும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காற்று போன பலூன்களானதையும் எடுத்துரைக்கதான் திமுக உரிமை மீட்கும் முழக்கம் ஒழிக்க இருக்கிறது.”

Exit mobile version