ADMK TVK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் காலூன்றியதும் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாநாட்டின் மூலம் எனது எதிரி யார் ஆதரவாளர் யாரென்பதை சொல்லாமல் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியை உடைப்பதையே மறைமுக திட்டமாக விஜய் வைத்திருந்தார். அதேபோல மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு எனக் கூறியது ஆளும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பாஜக கூட்டணியை அதிமுக உதறி தள்ளியதால் தவெக-வுடன் கூட்டணி வைக்க எளியாமாக வழி அமைந்துவிட்டது என்று எண்ணி பெரும் மூச்சி விட்டனர். ஆனால் அச்சமயத்தில் தான் தவெக கட்சி சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதிமுக-வுடன் கூட்டணி என்ற பேச்சு ஏதுமில்லை, வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினர்.
அதற்கடுத்து ஒவ்வொரு தலைவர்களின் பிறந்தநாள் இரங்கல் என வாழ்த்து தெரிவித்த வந்த விஜய் எம்ஜிஆர் இறந்த நாளில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக அன்று தான் பெரியார் நினைவு தினம் என்பதால் அவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார். அதை வைத்து பார்த்தபொழுது கட்டாயம் இனி அதிமுக-வுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார் என கூறி வந்தனர்.
அதே சமயம் பாஜக- வுடனும் அதிமுக மீண்டும் கூட்டணி வைப்பது போல சில அறிகுறிகள் தென்பட்டது. இதனையெல்லாம் வைத்து அரசியல் விமர்சகரர்கள் இவ்வாறான முடிவை எடுத்தனர். ஆனால் இதனை தவிர்க்கும் விதமாக இன்று எம்ஜிஆர் பிரதனாளன இன்று விஜய் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.குறிப்பாக அவரது மாநட்டில் கூறியதைப் போல கூத்தாடி என்பதை சுக்குநூறாக உடைத்தவர் எம்ஜிஆர், அசைக்க முடியாத வெற்றியாளர், அதுமட்டுமின்றி இறந்தும் வாழும் புரட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வணக்கம் எனக் கூறியுள்ளார்.
பல்வேறு இடங்களில் அதிமுக-விலிருந்து மறைந்த தலைவரான எம்ஜிஆர் அவர்களின் செயல்களை மட்டும் எடுத்துரைத்து நானும் அவ்வழி வருபவன் தான் என எடுத்துரைக்கிறார். இது அதிமுக-வுடன் கூட்டணி வைப்பதற்கான அடித்தளமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.