Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் தினந்தோறும் பல கொள்ளை கொலை கொலை கட்ட பஞ்சாயத்து நடந்து வருகிறது.

ஆனால் இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அதேபோல அதிமுகவின் இ பி எஸ் ஒற்றை தலைமையை ஏற்க 99 சதவீதம் ஒப்பு கொண்டு விட்டனர்.

குறிப்பாக மாவட்ட செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரை ஆதரவு தெரிவிக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் ஆதரவே இல்லாமல் ஓபிஎஸ் எவ்வாறு பொதுக்குழு கூட்டம் நடத்த முடியும். இது மக்களின் கண்தொடைப்பிற்காக கூறும் பொய்.

இது பொதுக்குழு கூட்டம் அல்ல பொய் குழு கூட்டம். அதேபோல ஓபிஎஸ் கட்சி என்ற முறையில் எதையும் நடத்தவில்லை ஆட்களை சேர்த்து ஒரு நிறுவனமாகவே உருவாக்கி வருகிறார். எடப்பாடி அவர்கள் டிடிவி தினகரன் சசிகலா ஆகியவற்றை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார்.

ஆனால் ஓபிஎஸ் அவர்களோ சசிகலா டிடிவி தினகூஉடன் கூட்டணியில் கூட்டணியில் இருந்தார். தற்பொழுது ஓபிஎஸ் பக்கம் பெருமளவு ஆதரவு இல்லாததால் கட்சிக்கு சம்மதமே இல்லாதவர்களை கூப்பிட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நிர்வாக பொறுப்பை கொடுத்து வருகிறார்.

இதை பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது. கட்சிக்காக அயராது உழைத்தவர்கள் தான் அதற்குண்டான நிர்வாகத்தில் இருக்க முடியும்.

அதை தவிர்த்து யார் வேண்டுமானாலும் நிர்வாகப் பொறுப்பில் இருக்கலாம் என்பது தவறு. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் நிலையில் தற்போது கூட கூட்டணி கட்சிகள் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளலாம்.

ஏன் திமுகவுடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் கூட எங்களுடன் இணையலாம். திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பாலும் திமுக மீது அதிருப்தியே சமீபத்தில் உண்டாகியுள்ளது.

இதனால் சிறிதும் யோசிக்காமல் வந்துவிடலாம். பருவமழையால் மக்கள் பாதிப்படைந்து இருக்கும் இந்த சூழ்நிலையில் அப்பாவிற்கும் மகான் இருக்கும் லவ் டுடே ஸ்டோரிதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேபோல அரசின் கேபிள் டிவி நிறுவனத்தை ரத்து செய்து இவர்களுடைய சொந்த நிறுவனத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது இவ்வாறு திமுக மீது முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

Exit mobile version