Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக அரசை கண்டித்து சென்னையில் ‘மனித சங்கிலி’ போராட்டம் நடத்தும் அதிமுகவினர்!

#image_title

திமுக அரசை கண்டித்து சென்னையில் ‘மனித சங்கிலி’ போராட்டம் நடத்தும் அதிமுகவினர்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் திமுகவின் துணையுடன் தான் நடக்கிறது என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதனை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தொடர்ந்து வழிவுறுத்தி வருகிறார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நேற்று முன்தினம் இது தொடர்பாக விரைவில் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்தி தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டி ஆளுநர் ஆர். என். ரவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக, தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exit mobile version