Politics: முன்னாள் அமைச்சர், எம் பி சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், எம் பி யுமான சி.வி.சண்முகம் இன்று காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தார் அவர் வந்தபோது அங்கு எஸ் பி இல்லாத காரணத்தால் அங்குள்ள பார்வையாளர் அறையில் காத்திருந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் எஸ் பி வராததால் விழுப்புற ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.அதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்ள போவதாகவும் அதுகுறித்து அதிமுக அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜே சேனலில் பொய்யான தகவல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது திட்டவட்டமாக எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இவ்வாறு செய்தி பரப்புகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளிதேன்.
இது ஒன்றும் முதல் முறை இல்லை. இதுபோன்று மொத்தம் 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாருக்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என் மீது வழக்கு பதிவு செய்ய காட்டும் முனைப்பை நான் அளிக்கும் புகார் மீது காட்டுவதில்லை. எஸ் பி இடம் முன்கூட்டியே அனுமதி வாங்கியும் அவர் என்னை திட்டமிட்டு சந்திக்காமல் தவிர்க்கிறார்.
என்னுடைய புகாரை ஏற்காத இந்த அரசு பொதுமக்களுக்கு எப்படி நடவடிக்கை எடுக்கும், இது தமிழக நாடா?கருணாநிதி குடும்ப நாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இதனை தொடர்ந்து சமாதானத்தை ஏற்காத சி வி சண்முகம் எஸ் பி நேரில் வரும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார். இந்நிலையில் விழுப்புரம் தாலுகா போலீஸ் அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதற்காக கைது செய்தனர்.