ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக நிர்வாகி!! தடாலடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ்!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கானது தற்பொழுது வரை தமிழகத்தில் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. பழி தீர்ப்பதற்காகவே இந்த கொலை நடத்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையொட்டி இந்த கொலை சம்பந்தமாக கிட்டத்தட்ட 11 பேரை தற்பொழுது வரை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த பொழுது தப்பி சென்ற முயன்றதால் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை க்கு பின்னணியில் பல முக்கிய நபர்கள் இருந்துள்ளது தற்பொழுதுதான் ஒன்றன்பின் ஒன்றாக தெரிய வருகிறது.
ஆற்காடு சுரேஷின் கொலைக்காக பழிவாங்கும் நோக்கில் இது செய்யப்பட்டிருந்தாலும், சினிமா பாணியை தாண்டி பெரும் அளவில் இதற்கென்று திட்டம் தீட்டியுள்ளனர். அந்த வகையில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலுவின் மைத்துனர் அவர் மூலமாக வழக்கறிஞர் மலர்கொடி, அவரது உதவியாளர் என பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலுவின் மைத்துனர் அருளுக்கு வழக்கறிஞர் மலர்க்கொடி மூலம் வெடிகுண்டுகள் வழங்கப்பட்டதோடு லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனையும் செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த மலர்கொடி?
அதிமுகவில், 2000 ஆம் ஆண்டில் பெரும் பாடகர் மற்றும் பேச்சாளர் தோட்டம் சேகர் என்றால் யாருக்கும் தெரியாதவரே இருக்க முடியாது. சென்னை மாநகரில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த தோட்டம் சேகர் என்பவரின் மூன்றாவது மனைவி தான் மலர்க்கொடி. இவர் 2001 ஆம் ஆண்டு மற்றொரு ரவுடியான சிவகுமார் என்றவரால் கொலை செய்யப்பட்டார்.
இதனை பழிவாங்கும் நோக்கில் இவரது மகன் தற்பொழுது சிவகுமாரை கொலை செய்துவிட்டு சிறைவாசம் சென்றுள்ளார். இச்சமையத்தில் தான் மலர்க்கொடி தனது கணவர் தொடர்புடைய நபர்களிடம் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் போலீசார் கைது செய்து விசாரித்தும் வருகின்றனர்.
மேற்கொண்டு மலர்க்கொடி சென்னை திருவல்லிக்கேணியில் அதிமுக இணை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்க்கொடியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.