அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி! 

0
208
Karthik Chidambaram

அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி! 

சரியான. தலைமை இல்லாததால் அதிமுக என்று அழைக்கப்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது என்று கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார். 

இன்று(ஜூன்17) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள ஈதுக்கா மைதானத்தில் இன்று(ஜூன்17) பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் சிதம்பரம் அவர்கள் “காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் எந்த காலத்திலும் மத ஒற்றுமைக்கு சாதகமாக உறுதுணையாக இருக்கும். நீட் தேர்வு என்பது தேர்வு அல்ல. அது ஒரு மோசடி. நீட் தேர்வு நம்பகத் தன்மையை இழந்துவிட்டது. 

வினாத்தாள் கசிந்தது, கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த நீட் தேர்வை தமிழகம் முதன். முதலாக எதிர்க்கத் தொடங்கியது. தற்பொழுது மற்ற மாநிலங்களும் எதிர்க்கத் தொடங்கியுள்ளது. தமிழகம் கூறுவதை மற்ற மாநிலங்கள் காது கொடுத்து கேட்கத் தொடங்கியுள்ளது. 

சசிகலா அவர்கள் பேசியது உட்கட்சி விவகாரம் ஆகும். அதிமுக கட்சியில் சரியான தலைமை தற்பொழுது இல்லை. இதனால் அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது. அதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று அவர் கூறினார்.