விடியா திமுக மாடல் ஆட்சியை கடுமையாக கண்டித்து திங்கட்கிழமை அதிமுக போராட்டம்!!

0
86
AIADMK protests on Monday strongly condemning Vidya DMK model rule!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்ட வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட அநிதியை கண்டித்து நேற்று நடக்க இருந்த போராட்டங்கள் தேதியை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணம் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் கலமானதை ஒட்டி இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 30.12.2024 திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலில் வன்கொடுமைகள் பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியை கடுமையாக கண்டிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று 27.12.2024 நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஓத்திவைக்கப்பட்டது. மேலும் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நீதிமன்றம், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும்.

விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியை கண்டித்து நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்பின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் முன்னாள் பிரதிநிதிகளும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் நலனில் முன்வைத்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று இந்த அறிக்கையில் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.