Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம்

#image_title

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம்

சேலம் அதிமுக பொதுச்செயலாளர் வீட்டின் முன்பாக தெருக்கூத்து கலையை அதிமுகவினர் அரங்கேற்றினர்.

ராஜா வேடம் அணிந்து மேளதாளங்களுக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி அசத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிக்க இரண்டாம் நாளாக அவரது வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் வந்தனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் அவர்களது மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருவண்ணாமலை தெருக்கூத்து கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க ராஜா வேடமனிந்து வாழ்த்து தெரிவிக்க வருகை தந்தனர்.

அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு தெருக்கூத்து நாடகத்தை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக வருகை தந்தால் நெடுஞ்சாலை நகர் பகுதி திருவிழா போல காட்சி அளிக்கிறது.

Exit mobile version