முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தமிழக மக்களிடையே ஒரு திகில் சம்பவமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பது யார்? இதற்கான காரணம் என்ன? கொடநாடு பங்களாவில் மயமான ஆவணங்கள் நகைகள் உள்ளிட்டவை எங்கே சென்றது? என்று பல்வேறு கேள்விகள் மக்களிடையே என தொடங்கினர் இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் இந்த வழக்கு தூசி தட்டப்பட்டது.
இந்த வடக்கின் விசாரணை உதகமண்டலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு நடுவில் 316 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்திருக்கின்றன. இவை அனைத்தும் சிபிசிஐடி வசனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் சி
பி சி ஐ டி காவல்துறையினர் கொடநாடு எஸ்டேட்டிற்கு விரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அங்கே காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த மரம் வெட்டப்பட்டு இருந்தது. அதோடு புதிய மரம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தடயங்களை அழிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இது கொடநாடு வழக்கில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் வழங்கிய வாக்கு மூலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில்? வழக்கு விசாரணை எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்புமா? அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற பரபரப்பு தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனின் பெயரும் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானதும் ஆத்தூர் அருகே தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சேலத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது இவை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில்தான் சமீபத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. அதில் அதிமுக நிர்வாகிகளோ, கட்சியினரோ யாரும் பங்கேற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில்தான், கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சலசலப்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் ஊழல் வழக்கில் இருந்து தங்களை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒரு விதத்தில் கை கொடுப்பார் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும் தங்களுக்கு நெருங்கி வட்டாரத்தில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விவகாரம் தான் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கு சென்று அவர் அப்சட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே உட்கட்சி பூசல் காரணமாக, பன்னீர் செல்வத்துடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதை தவிர தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியாகி எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கொடநாடு வழக்கும் நெருக்கடியை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.