Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக வன்முறை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில் அதிமுக அலுவலக கலவரம் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் அலுவலகத்திற்குள் நுழைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரிய வந்ததாகவும், இது குறித்து புகாரில் உயரதிகாரிகளை தொடர்பு கொண்ட பின்னர் தான் புகாரை பெற்றதற்கான சான்றிதழ் கிடைக்கப் பெற்றதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை மாதம் 23ஆம் தேதி புகார் வழங்கியவுடன் புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதால் புகாரை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும், அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம், ஆவணங்கள் சூறை, தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டதாக தெரிவித்து அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்குகள் குறித்த ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது தொடர்பாக தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Exit mobile version