Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

200 இடங்களில் ஆளும்கட்சி வெற்றி பெறும்! கடம்பூர் ராஜு ஆரூடம்!

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மதுரையில் அழகிரி முழுக்க முழுக்க ஸ்டாலின் பற்றியே பேசி இருக்கிறார். அதற்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் இதில் நாங்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவித்து விட இயலாது. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுகவின் தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கின்றார்.

ஆட்சிக்கு வர இயலாது என்று தெரிந்த கட்சிகளும், லட்டர் பேடு கட்சிகளும் கூட நாங்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வர இயலும் என்று தெரிவிப்பார்கள். அது அவர்களுடைய உரிமை பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் தற்போது வரை கூட்டணியில் இருந்து வருகின்றன .எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெற்றி அடைந்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

திரைத் துறையினரின் பல கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது. கொரோனா காலத்தில் திரைத்துறையினர் வைத்த கோரிக்கைகளை ஏற்று பல தளங்களை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கொரோனா தமிழ்நாட்டில் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாக இருக்கிறது. 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கு திறப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று பெரிய அரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையானது தமிழக அரசால் ஏற்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு முதலமைச்சர் அனுமதி கொடுத்து இருக்கின்றார் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Exit mobile version