Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

#image_title

புதுக்கோட்டையில் தாரை தப்பட்டை முழங்க அதிமுகவினர் வீடு வீடாக சென்று அவர்களின் ஒப்புதல் பெற்று உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் அவர்களை இணைத்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக மட்டுமல்லாது திமுகவும் தற்போது தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. திமுக கடந்த பல தினங்களாக உறுப்பினர் சேர்க்கையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கியது.அதிமுக ஒரு தொகுதிக்கு 40,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அதன்படி புதுக்கோட்டை நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது புதுக்கோட்டை உழவர் சந்தையில் இருந்து அதிமுகவினர் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை எடுத்துச் சென்று வீடு வீடாக சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து அதிமுகவில் தங்களை சேர ஒப்புதல் பெற்றுக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

அதிமுகவின் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Exit mobile version