Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.வேட்பாளர் பட்டியல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்தவகையில் திமுக பல அறிவிப்புகளை தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வோம் என்று கூறினார்கள்.ஆனால் அதை இப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தி காட்டி மக்களின் மனதில் அனைவரை விட ஒருபடி மேலாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அந்தவகையில் குருவைபோலவே சிஷ்ய பிள்ளைகள் என சொல்லிர்கினங்க பல வித புதிய யுக்திகளை அதிமுக அமைச்சர்கள் செய்து மக்களின் ஓட்டுகளை கவர நினைகின்றனர்.ஓட்டு கேட்டு வருபவர்களிடம் ஆரத்தி எடுப்பது ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர்.அதிமுக தொகுதியின் விஸ்வநாதனின் ஆதரவாளர்,இவர் வள்ளல் பரமரையில் பொறந்தவர் போல ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குகின்றார்.இது லஞ்சம் என்றும் கூட கருதலாம்.

இவருக்கு ஒரு படி மேலாக சென்று விட்டார் இந்துசமய அரநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.இவரின் மீது சிலை திருட்டு வழக்குகள் சுமத்தப்பட்ட நிலையில் கூட வாயை திறந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் அமுக்கமாக தனது அரசியல் பணிகள செய்து வந்தார்.தற்போது அவர் வாக்குகேட்டு செல்லுமிடத்தில் அவருக்கு ஏற்கனவே போர்த்தப்பட்ட பொன் ஆடைகளை கையோடு எடுத்து சென்று ஒவ்வொரு வாக்காளருக்கு போர்த்தி வாக்குகளை சேகரித்து வருகின்றார்.இவர் பணத்தை அதிக அளவு மிச்சம் படுத்துவார் போல தெரிகிறது.

பெண்களைபார்க்கும் பொது அந்த பொன் ஆடைகளை கையில் கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகின்றார்.சிலர் பொன் ஆடைகளை பெற்றுக்கொண்டு தங்களது கோரிக்கைகளையும் சொல்லி விடுகின்றனர்.இவர் செய்கின்ற இந்த செயல் யாரும் எந்த கட்சியினரும் செய்யாத செயலாக உள்ளது.

Exit mobile version