ஏர் இந்திய நிறுவனம் வெளியிட்ட கட்டண சலுகை! இன்றுடன் முடிவடையும் முன்பதிவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் சீனா,ஜப்பன்,போன்ற உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது.அதனால் அந்த விழாவை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமான டிக்கெட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிறப்பு விமான டிக்கெட் சலுகையை கடந்த 21 ஆம் தேதி தொடங்கப்பட்டு இன்று முடிவடைகின்றது.இந்த விமான டிக்கெட் சலுகை விமானத்தின் எகனாமி வகுப்புக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தங்களின் விருப்பம் போல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு தள்ளுபடியில் விமான டிக்கெட்டின் விலை ரூ 1705 ரூபாயில் கிடைக்கும்.இந்த டிக்கெட் சலுகை உள்நாட்டின் 49 இடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம்.அந்த வகையில் திமாப்பூர்-கவுகாத்தி ரூ1783,கோவை-மும்பை ரூ 2830, அகமதாபாத்-மும்பை ரூ 1806,டெல்லி ஸ்ரீநகர் ரூ 3730, டெல்லி-போர்ட் பிளேர் ரூ 8690, பெங்களூர்-மும்பை ரூ 2319,சென்னை- டெல்லி ரூ 5985 என வழங்கப்பட்டு வருகின்றது.