Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது. விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Exit mobile version