Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்…

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்…

முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் அடையளத்தையும் புதிய லைவரியையும் வெளியிட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் ஆதரவு பெற்று இயங்கும் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய தனது புதிய பிராண்ட் அடையாளத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புதிய பிராண்ட் அதாவது ஏர் இந்தியாவின் புதிய லோகோ சிவப்பு மற்றும் ஊதா நிறத்தித் உள்ளது.

ஏர் இந்தியாவின் புதிய லோகோ டிசைன், மற்றும் புதிய விமானத்தின் டிசைன் மக்கள் மத்தியில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

புதிய தலைமை, புதிய பிராண்ட் அடையாளத்தின் கீழ் சிறப்பான வாடிக்கையாளர் தரத்துடன் விமான சேவை இருக்க வேண்டும். மேலும் உரிய நேரத்தில் விமானம் கிடைப்பது உரிய நேரத்தில் விமானம் இயங்குவது போல இருந்தாலே நல்லது என்று மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏர் இந்தியா நிறுவனம் 70 பில்லியன் டாலர் செலவில் ஏர் பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 470 புதிய விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை போட்டாள்ளது.

Exit mobile version