Bike Wheel- ஐ கழட்டாமல் Air கசிவை சரிசெய்யலாம்!

0
91
Air Leak problem solution without Bike Wheel removal

Bike Wheel- ஐ கழட்டாமல் Air கசிவை சரிசெய்யலாம்!

பைக்கில் எந்த பக்கமும் பஞ்சர் இல்லாமல் ஆனால் பைக்கின் வீலில் எந்தப் பகுதியில் காற்று கசிகிறது என்று தெரியாமல் காற்று போய் கொண்டே இருக்கும். அதனை எப்படி நீங்களே சரி செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இதற்கு நீங்கள் Bike Wheel கழட்ட வேண்டும் என்று அவசியமே இல்லை. அந்த மாதிரி எந்த பகுதியில் இருந்து காற்று கசிகிறது என்று தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். எப்பொழுதும் bike Wheel- mouth பகுதியில் தான் காற்று வெளியாகும்.

இதனை நீங்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பீர்கள் என்றால் அந்த மவுத் பகுதியில் சோப்பு கலந்த தண்ணீரை ஊற்றினீர்கள் என்றால் உங்களுக்கு அதில் இருந்து காற்று வெளியாவது ஒரு பப்புல்ஸ் போல தெரியும்.

1. இப்பொழுது அந்த மவுத் பகுதியில் உள்ள மூடியை மற்றும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

2. ஒரு டெஸ்டர் எடுத்து அந்த மவுத்து பகுதியில் மேல் வைத்து அனைத்து காற்றையும் கழட்டி விடவும்.

3. இப்பொழுது ஒரு கத்தியை எடுத்து பழைய மவுத் பகுதியை கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

4. இப்பொழுது மவுத்தின் மேல் பகுதியை மட்டுமே நீங்கள் அறுத்து எடுத்து இருப்பீர்கள், ஆனால் கீழ்ப்பகுதி இருக்கும் அல்லவா அதனையும் நாம் எடுக்க வேண்டும்.

5. ஒரு ஸ்குரு டிரைவர் எடுத்து வீல் இருக்கும் டையருக்கும் நடுவில் ரிம் இருக்கும் அல்லவா அதன் உள்ளே விட்டு எடுக்கும் பொழுது மௌத்தின் கீழ் பகுதி உங்களுக்கு தெரியும்.

6. மேல் பகுதியில் டெஸ்டரை வைத்து குத்தும் பொழுது கீழ்ப்பகுதியும் வந்து விடும்.

7. இப்பொழுது கடைகளில் புதிய மவுத் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் மூடியை கழட்டிவிட்டு அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி நோக்கி போடவும்.

8. இப்பொழுது அது முழுதாக மேலே வந்திருக்காது.

9. மேலே வந்திருக்கும் பகுதியை மட்டும் ஒரு சிறிய துணி எடுத்து கட்டிக் கொள்ளவும்.

10. அந்த துணி பகுதியை கட்டிங் பிளேடு வைத்து நன்றாக பலம் கொடுத்து இழுத்தீர்கள் என்றால் மவுத் பகுதி மற்றும் ரிம் பகுதியும் ஒன்றாக லாக் ஆகும்படி லாக் ஆகிடும். அதை நீங்கள் பலம் கொடுத்து இழுக்கும் பொழுது உங்களுக்கு நன்றாக தெரியும். .

11. இப்பொழுது மவுத்தின் மூடியை எடுத்து நன்றாக டைட் செய்து கொள்ளவும்.

12. இப்பொழுது அதன் மேல் சோப்பு தண்ணீர் அல்லது தண்ணீர் ஊற்றி பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு உண்மை வெளிவரும். காற்று வெளிவரும் பொழுது நாம் சோதனை செய்து பார்த்த பொழுது பபுள்ஸ் வந்தது அல்லவா! அந்த மாதிரியான பபுள்ஸ் இப்பொழுது வந்திருக்காது.