பாலஸ்தீனத்தில் 36 உயிரை பறித்த வான்வழி தாக்குதல் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் அயல்நாடுகள்!!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் படையினர் நுழைந்து கடும் தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலை சேர்ந்தோர் பலியான நிலையில், மேலும் பலர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இன்னமும் அவர்கள் முழுமையாக மீட்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தனது பதில் தாக்குதலை நடத்த துவங்கினர்.இந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 31,533 உயிரிழந்த நிலையில் 73,546 நபர்கள் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இன்று இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.இந்த தாக்குதலில் அகதிகள் முகாம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மக்கள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், காசா பகுதியில் அமைந்துள்ள ரபா நகரில் 15 லட்சம் பாலஸ்தீனர்கள் சிக்கியுள்ளனர்.அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய பின்னர், தரை வழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.இதற்கிடையே, இந்த தாக்குதல் நடத்த ஐநா அமைப்பு, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.