ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த சலுகைகளை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றனர். என் நிலையில் 84 நாட்களுக்கான 859 ரூபாய் மதிப்பிலான ரீபெய்ட் திட்டம் இரண்டு நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதைக் குறித்து பின்னர் விரிவாக காண்போம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு :-
தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைந்த விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினம் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
இது தவிர இதில் சில சலுகைகளும் உள்ளன. அவை, ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு :-
தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்திலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள், ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகளை வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதில் எந்த பிளான் உங்களுக்கு சரியாக இருக்கும் என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.