ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வழக்கமாக ஏர்டெல் ரூ. 48 ரீசார்ஜ் சலுகையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனினும், சிலருக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுந்தகவல் மூலம் தெரிவித்து இருக்கிறது.
தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்
