Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

ஏர்டெல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 10000 கோடு ரூபாயை செலுத்தியுள்ளது.

தொலைதொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அடக்கம். இதனால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது ஏர்டெல்.

இந்த வகையில் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரவேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஆக இருந்தது. அதை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாமல் இருந்தன.

இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் தாம் செலுத்தவேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்.20 ஆம் தேதிக்குள், மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் கெடு கேட்டு இருந்தது. அதன் படி தற்போது 10,000 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. ஏர்டெல் இன்னும் ரூ.25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது.

கடுமையான நிதிப்பற்றாக்குறையில் இருப்பதாக சொல்லப்படும் ஏர்டெல் நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்காக கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது.

Exit mobile version