Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம்மை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனடியாக அவற்றை 4ஜி சேவை சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் ஜியோவை அடுத்து இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி தற்போது 3ஜி சேவை நிறுத்தப்படுவதாகவும், எனவே 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் சென்று 4ஜி சிம் பெற்றுக் கொள்ளும்படியும் அறிவித்துள்ளது

ஆனால் அதேவேளையில் 2ஜி சேவையை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு மாறிவிட்டதால் செலவை மிச்சப்படுத்தும் நோக்கில் 3ஜி சேவை நிறுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

எனவே 3ஜி சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகிலுள்ள ஏர்டெல் கஸ்டமர் அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது

Exit mobile version