Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள்?

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள்

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பேருந்து,விமானம்,ரயில் போன்றவை இயங்காமல் இருகின்றன. இதனால் போக்குவரத்து சேவைகள் பெரும் பொருளாதார நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக ரயில்வே துறையில் கிட்டதட்ட பல கோடிக்கு மேலான வருமான இழப்பை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் கடும்  நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

போக்குவரத்து பெரித்தும் இல்லாத நிலையில், தற்போது இந்தியா முழுவதும் ரயில் மற்றும் விமான சேவைகள் கடந்த நான்கு மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ளது

இதில் ரயில்வே நிறுவனம் கிட்டதட்ட ரூ.35,000 கோடிக்கு வருமான இழப்பை சந்திக்க நேரும் என ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 – 15% மட்டுமே ரயில்வே வருமானத்தை பார்த்துள்ளதாக  அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த இழப்பை சரிசெய்ய சரக்கு ரயில்கள் மூலம் ஈடுகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

கொரோனவால் விமான சேவையும் பதித்துள்ளது . இதனால் சர்வதேச அளவில் விமான சேவை பெரும் சரிவை சந்தித்துள்ளது. விமான சேவையில் 86.5சதவிதமும் , சர்வதேச விமான சேவையில் 97 சதவிதமாகவும் இழப்பை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version